சினிமாவில் பெரிய கதாநாயகியாக ஆக்கிவிடுகிறேன் என ஆசை வார்த்தி கூறி பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர் - இளம்பெண் பரபரப்பு புகார்

சினிமாவில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி இளம் பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்த பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-03-08 10:13 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில்," கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறினார். சினிமாவிற்கு நடிக்கச் செல்வதற்கு முன்பு அது குறித்து பேச வேண்டும் என என்னிடம் தெரிவித்தார். தொடர்ந்து பின்னர் என்னை அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வருமாறு அழைத்தார். அவரை நம்பி அங்குச் சென்ற என்னை அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர்.

அதன் பின்பு அவர்கள் எனக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவது குறித்து இந்த தகவலும் என்னிடம் தெரிவிக்கவில்லை. இது குறித்து நான் அவரிடம் கேட்ட போது அவர்கள் அனைவரும் என்னைச் சேர்ந்து மிரட்டுகின்றனர்.

எனவே என்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாகக் கேரளாவில் பாலியல் வன்கொடுமையின் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. சிறு குழந்தைகள் முதல் இது போன்ற இளம் பெண்கள் எனப் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது,

Tags:    

மேலும் செய்திகள்