இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் - உலக வங்கி கணிப்பு

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

Update: 2023-04-04 19:12 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நடப்பு 2023-2024 நிதி ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. முன்பு, 6.6 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து உலக வங்கி தனது அறிக்கையில், ''அதிகரித்து வரும் கடன் சுமை, வருமானத்தில் மெதுவான வளர்ச்சி ஆகியவற்றால் தனியாரின் நுகர்வு குறைந்து விடும். கொரோனாவுக்காக அளிக்கப்பட்ட நிதி ஆதாரங்கள் வாபஸ் பெறப்பட்டதால், அரசின் நுகர்வும் மெதுவாகவே இருக்கும். குறைவான பொருளாதார வளர்ச்சிக்கு இதுவே காரணங்கள்'' என்று கூறியுள்ளது.

அதே சமயத்தில், நடப்பு கணக்கு பற்றாக்குறை 3 சதவீதத்தில் இருந்து 2.1 சதவீதமாகவும், பணவீக்கம் 6.6 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாகவும் குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்