மனைவியை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை; பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு

மனைவியை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2023-01-28 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு காமட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் கைலாஷ். தொழிலாளி. இவரது மனைவி மாலதி. இந்த நிலையில் மாலதியின் நடத்தையில் கைலாசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கைலாஷ் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதுகுறித்த புகாரின்பேரில் காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து கைலாசை கைது செய்தனர்.

இந்த வழக்கு பெங்களூரு சிட்டி கோர்ட்டில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை முடித்து தீர்ப்பு கூறினார். அப்போது நீதிபதி, நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை ைகலாஷ் கொலை செய்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்