வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது
வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு: மல்லேசுவரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நபர் வசிக்கிறார். இவர், வயதான தனது தாயை கவனிப்பதற்காக ஒரு பெண்ணை வேலைக்கு வைத்திருந்தார். கடந்த மாதம் (அக்டோபர்) 23-ந் தேதி தீபாவளிக்காக தனது சொந்த ஊருக்கு அந்த நபர் குடும்பத்துடன் சென்றிருந்தார்.
தாய் மட்டும் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடிவிட்டு வேலைக்கார பெண் தலைமறைவாகி இருந்தார். இதுகுறித்து மல்லேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடிவந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான 133 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.