பெண்கள் உடை மாற்றுவதை செல்போனில் படம்பிடித்த ஊழியர் கைது

சூரத்கல் தனியார் ஆஸ்பத்திரியில் பெண்கள் உடை மாற்றுவதை செல்போனில் படம் பிடித்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-08 18:45 GMT

மங்களூரு:-

தட்சிண கன்னடா மாவட்டம் சூரத்கல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஆஸ்பத்திரி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஆஸ்பத்திரிக்கு பெண் ஒருவர் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்க முற்பட்ட டாக்டர், உடைகளை மாற்றிவிட்டு ஆஸ்பத்திரியில் வழங்கப்படும் உடையை அணிந்துவரும்படி கூறினர். அதன்படி அந்த பெண்ணும் உடை மாற்றும் அறைக்கு சென்று மாற்ற முயற்சித்தார். அப்போது அவருக்கு அந்த அறையில் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது. இதையடுத்து அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். அப்போது அந்த அறையில் செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்து கதறி கூச்சலிட்டு ஆஸ்பத்திரி ஊழியர்களை அழைத்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த ஊழியர்கள் அந்த செல்போனை கைப்பற்றி விசாரித்தனர்.

அதில் அந்த செல்போன் அதே ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்த பவன் குமார் (வயது 21) என்ற ஊழியருடையது என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சூரத்கல் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று பவன்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் இதுபோல பல பெண்கள் உடை மாற்றுவதை படம் எடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்த அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்