கோர்ட்டு வளாகத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து

பாதுகாப்புக்கு நின்ற போலீசார் துக்காராமை கைது செய்ததுடன், அவர் மீது தனி வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2023-05-09 23:53 GMT

ரேபரேலி,

உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மாவட்ட கோர்ட்டில் ஒரு குடும்ப தகராறு வழக்கு நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கின் விசாரணைக்காக துக்காராம் என்பவர் ஆஜரானார். அவரது மனைவி உமாதேவியும் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

கோர்ட்டு வளாகத்தில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த துக்காராம், மனைவியை கத்தியால் குத்தினார்.

உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் துக்காராமை கைது செய்ததுடன், அவர் மீது தனி வழக்கு பதிவு செய்தனர். பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்ட உமாதேவி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  

Tags:    

மேலும் செய்திகள்