நிலத்தகராறில் பெண் கொலை; விவசாயி கைது
சித்ரதுர்கா அருகே நிலத்தகராறில் பெண்ணை கொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
சித்ரதுர்கா:
சித்ரதுர்கா அருகே கெலஹலகட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் புருஷோத்தம், விஸ்வநாத். இவர்கள் 2 பேரும் விவசாயிகள் ஆவார்கள். 2 பேரின் விவசாய நிலமும் அருகருகே உள்ளது. இந்த நிலையில் விஸ்வநாத்தின் 3 ஏக்கர் நிலத்தை புருஷோத்தம் அபகரிக்க முயன்று உள்ளார். இதுதொடர்பாக புருஷோத்தம், விஸ்வநாத் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை விஸ்வநாத்தின் மனைவி பாக்கியம்மா, விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சென்ற புருஷோத்தம் மற்றும் அவரது குடும்பத்தினர் பாக்கியம்மாவை உருட்டு கட்டை, கல்லால் தாக்கி கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சித்ரதுர்கா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமை கைது செய்தனர். மேலும் 7 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.