மும்பை விமான நிலையத்தில் 4.9 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் காலணியில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.4.9 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-10-01 11:03 GMT

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலில் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் விமான நிலையத்தில் வந்த பெண்பயணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர் காலணியில் மறைத்து வைத்து விலை உயர்ந்த போதை பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த பெண்ணிடம் இருந்து 4.9 கோடி மதிப்புள்ள 490 கிராம் எடையுள்ள கொக்கைன் போதை பவுடரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த பெண்ணை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்