மராட்டியம்: பைக் மீது லாரி மோதியதில் ஆறு மாத குழந்தை உட்பட 3 பேர் பலி..!

மராட்டிய மாநிலத்தில் பைக் மீது லாரி மோதியதில் ஆறு மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Update: 2022-07-04 00:58 GMT

கோப்புப்படம் 

புனே,

மராட்டிய மாநிலம், புனே நகரின் புறநகரில் உள்ள பிரங்குட் பகுதியில் படேல் என்பவர், நேற்று மாலை தன் மனைவி மற்றும் குழந்தையுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது பிரேக் செயலிழந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து படேலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், அவரது மனைவி மற்றும் ஆறு மாத குழந்தை உயிரிழந்தனர். தொடர்ந்து அந்த லாரி, தனாஜி தாமலே என்பவர் சென்றுகொண்டிருந்த பைக் மீதும் மோதியது. இதில் அவரும் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் படேல் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரேக் செயலிழந்ததன் காரணமாக லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்