தொடர் சண்டை: சூட்கேசில் தாயின் சடலுத்துடன் காவல் நிலையத்திற்கு சென்ற பெண்;அதிர்ச்சி அடைந்த போலீசார்

பெங்களூருவில் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபம் அடைந்த பெண் கத்தியால் குத்திகொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-06-13 05:31 GMT

பெங்களூரு,

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுமார் 35 வயதான பெண் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் பிசியோதெரபி எனக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவருடன் அவரது தாயார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த பெண் கத்தியால் தனது தாயாரை குத்தி கொலை செய்தார். பிறகு தாயாரின் உடலை சூட்கேசில் அடைத்து காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு போலீசார் சூட்கேசை திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர்.

தூக்க மாத்திரைகளை ஊட்டிவிட்டு தாயைக் கொன்றதாகக் கூறியுள்ளார். அந்த பெண்ணுக்கு திருமணம் முடிந்து கணவன் இருப்பதாகவும், கணவன் சம்பவம் நடைபெற்றபோது வீட்டில் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கொலை நடைபெற்றபோது, அந்த பெண்ணின் மாமியார் பக்கத்து அறையில் இருந்துள்ளார்.அவருக்கு தெரியாத வகையில் கொலை செய்து உடலை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்