பத்ரா கால்வாயில் குதித்து பெண் தற்கொலை

பத்ரா கால்வாயில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-13 18:45 GMT

சிவமொக்கா-

பத்ரா கால்வாயில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

2-வது திருமணம்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா சங்கிலி புரா-ஒசூர் இடையே ஓடும் கால்வாயில் கடந்த 9-ந் தேதி இளம் பெண்ணின் உடல் மிதப்பதாக பத்ராவதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பத்ரா கால்வாயில் பிணமாக கிடந்தது சிக்கமகளூரு மாவட்டம் கடூர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பது தெரியவந்தது.

அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பத்ராவதி தாலுகா சங்கிலிபுரா பகுதியை சேர்ந்த கோவிந்தராஜு என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிலையில் கோவிந்தராஜுவுடன் லட்சுமி சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். கோவிந்தராஜுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து அவர் 2-வதாக லட்சுமியை திருமணம் செய்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கால்வாயில் குதித்து தற்கொலை

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கோவிந்தராஜின் பெற்றோர் லட்சுமியை கொடுமைப்படுத்தி வந்தனர். சாதி பெயரை கூறி திட்டி வந்துள்ளனர். இதனால் லட்சுமி மனமுடைந்து காணப்பட்டார். இதுகுறித்து லட்சுமி கணவரிடம் கூறி அழுதுள்ளார். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. மேலும் லட்சுமி கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

வீட்டில் பத்ரா கால்வாயில் துணி துவைக்க போவதாக லட்சுமி கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் கோவிந்தராஜு லட்சுமியை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. அப்போது அவர் பத்ரா கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து பத்ராவதி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்