ஆயுதங்களால் தாக்கி பெண், சகோதரர் படுகொலை குடும்ப தகராறு காரணமா? போலீசார் விசாரணை

ஆயுதங்களால் தாக்கி பெண், சகோதரர் படுகொலை செய்யப்பட்டனர்.

Update: 2022-06-06 21:54 GMT

விஜயாப்புரா: விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி தாலுகா பூதிஹாலா அருகே அக்கிஹாலா கிராமத்தை சேர்ந்தவர் நாகனகவுடா (வயது 45). இவரது சகோதரி ராஜஸ்ரீ (வயது 40). இவருக்கும் சங்கரகவுடா பிரதார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களில் இருந்தே ராஜஸ்ரீ, சங்கரகவுடா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

இதனால் தனது கணவரை பிரிந்து ராஜஸ்ரீ தனியாக வசித்து வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று நாகனகவுடாவும், ராஜஸ்ரீயும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்மநபர்கள் நாகனகவுடா, ராஜஸ்ரீயை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். மேலும் 2 பேரின் தலையிலும் மர்மநபர்கள் கல்லை போட்டனர். இதில் ரத்தவெள்ளத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து சிந்தகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்