டெல்லி: ஓட்டல் அறையில் பணம் கொடுக்காமல் 15 நாட்கள் தங்கிய பெண் கைது

போலீசார் விசாரணை நடத்தி ஜான்சி ராணி சாமுவேல் என்ற பெண்ணை கைது செய்தனர்.

Update: 2024-01-18 00:52 GMT

புதுடெல்லி,

டெல்லி ஏரோசிட்டி பகுதியில் உள்ள ஓட்டலில் கடந்த டிசம்பர் மாதம் 13-ந்தேதி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜான்சி ராணி சாமுவேல்(37) என்ற பெண் அறை எடுத்து தங்கியுள்ளார். ஆனால் அவரது அறைக்கான கட்டணத்தை அவர் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

இது குறித்து ஓட்டல் ஊழியர்கள் கேட்டபோது, அவர்களிடம் ஜான்சி ராணி சாமுவேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தி அந்த பெண்ணை கைது செய்தனர். அந்த பெண் மீது போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்