மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பதை மறைத்து ஒன்றாக வாழ்ந்துள்ளார்; ஆண் நபர் மீது பெண் புகார்

மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பதை மறைத்து ஆண் நபர் தன்னை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி ஒன்றாக வாழ்ந்துள்ளதாக பெண் புகார் அளித்துள்ளார்.

Update: 2022-07-18 23:06 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்த பெண் பின்கி. இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இதனிடையே, பின்கியின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து பின்கியிடம் ஹுட்டு என்ற பெயரில் ஆண் நபர் பழகியுள்ளார்.

கடந்த 10 மாதங்களுக்கு முன் பின்கிக்கும் ஹூட்டுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பின்கியும், ஹூட்டும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். ஆனால், இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பின்கியை அவருடன் வாழ்ந்து வந்த ஹூட்டு பெரேலி நகருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 7 மாதங்களாக திருமணம் செய்துகொள்ளாமல் கணவன் - மனைவி போல் வாழ்ந்துள்ளனர்.

பின்னர், பின்கியை ஹூட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு சென்றதும் பின்கிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

10 மாதங்களாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்த நபரின் பெயர் ஹூட்டு இல்லை என்பதும் அவரின் உண்மையான பெயர் ரஹ்மத் ஹசன் என்பதும் தெரியவந்தது. முதலில் தன்னை இந்து மதத்தை சேர்ந்தவர் என பின்கியிடம் அறிமுகமான நிலையில் அவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

தன்னை ஏமாற்றியது குறித்து ரஹ்மத் ஹசனிடம் பின்கி கேட்டபோது, ரஹ்மத்தும் அவரின் குடும்பத்தினரும் பின்கியை பல முறை தாக்கியுள்ளனர்.

இதற்கிடையில், பின்கி தனது குழந்தையுடன் கடந்த 10-ம் தேதி ரஹ்மத் வீட்டில் இருந்து தப்பியுள்ளார். அவர் காசியாபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு மீண்டும் வந்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து தன்னை ஏமாற்றிய ரஹ்மத் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பின்கி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பதை மறைத்து தன்னுடன் பாலியல் ரீதியில் உறவு வைத்து ரஹ்மத் என்னை ஏமாற்றியதாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரஹ்மத்தை கைது செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்