முழுமையாக தயார் செய்யாமல் 'தீர்ப்பின் முடிவு பகுதியை கோர்ட்டில் கூறக்கூடாது' - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

முழுமையாக தயார் செய்யாமல் தீர்ப்பின் முடிவு பகுதியை கோர்ட்டில் கூறக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

Update: 2023-04-12 20:12 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

கர்நாடக மாநிலத்தில் கீழ் கோர்ட்டு நீதிபதி ஒருவர் கோர்ட்டில் தீர்ப்பை முழுமையாக கூறாமல், அதன் முடிவு பகுதியை மட்டும் அறிவித்து விட்டு, பழியை சுருக்கெழுத்தர் மீது சுமத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார்.

இதற்காக அந்த நீதிபதி ஐகோர்ட்டால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டின் டிவிசன் பெஞ்சு, அந்த நீதிபதியின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டின் பதிவாளர் ஜெனரல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், பங்கஜ் மித்தல் அமர்வு விசாரித்தது.

விசாரணை முடிவில், தீர்ப்பின் முழு வாசகங்களும் தயாரிக்கப்படாமல் அல்லது (சுருக்கெழுத்தருக்கு) தட்டச்சு செய்வதற்கு ஆணையிடப்படாமல், தீர்ப்பின் முடிவுப்பகுதியை ஒரு நீதிபதி திறந்த கோர்ட்டில் அறிவிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். மேலும், கீழ் கோர்ட்டு நீதிபதி பணி நீக்கத்தை உறுதி செய்தும் உத்தரவிட்டனர்.

இந்த விவகாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதி மீதான தீவிரமான குற்றச்சாட்டுகளை கண்டுகொள்ளாமல் விட்ட ஐகோர்ட்டு நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்