வெற்றியோ தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம்- ராகுல் காந்தி

"இந்திய அணி வீரர்களே, நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள்” என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-20 00:04 GMT

அகமதாபாத்,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 3-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இதனால், இந்திய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு தலைவர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். அந்த வகையில் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் இந்திய அணிக்கு ஆறுதல் தெரிவித்து கூறியுள்ளதாவது;

"இந்திய அணி வீரர்களே, நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள். வெற்றியோ அல்லது தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம். அடுத்து வருவதை நாம் வெல்வோம். உலகக் கோப்பை வெற்றிக்கு தகுதியான ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்." என தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்