கர்நாடகாவில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர பாடுபடுவேன் - எடியூரப்பா

கர்நாடகாவில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்காகப் பாடுபடுவேன் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.

Update: 2023-02-24 14:25 GMT

பெங்களூரு,

கர்நாடக சட்டபேரவையில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று தனது நிறைவு உரையை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநில பேரவைத் தேர்தல்களில் இனி போட்டியிட மாட்டேன். எனது கடைசி மூச்சு வரை கட்சி வளர்ச்சிக்காகப் போராடுவேன்.அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். கர்நாடகாவில் மக்களின் சேவையில் நான் ஒவ்வொரு நாளையும் செலவிடுகிறேன்.

நான் தேர்தலில் போட்டியிடாமல் இருந்தாலும் எனக்கு பிரதமர் மோடி அளித்த மரியாதையையும், கட்சி எனக்கு அளித்த பதவிகளையும் மறக்க மாட்டேன். மாநிலத்தில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்காகப் பாடுபடுவேன். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வேன்.

காரிபுரா மக்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்றும், வரும் 27ஆம் தேதி எனக்கு 80 வயதாகிறது. பிரதமர் நரேந்திர மோடி எனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்