மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி தாமதம் ஏன்? மத்திய மந்திரி விளக்கம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டி பல ஆண்டுகள் ஆன பிறகும், கட்டுமான பணி தொடங்கப்படாதது ஏன் என்று மக்களவையில் எம்.பி ஒருவர் கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டி பல ஆண்டுகள் ஆன பிறகும், கட்டுமான பணி தொடங்கப்படாதது ஏன் என்று ஒரு உறுப்பினர் கேட்டார். அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீண் பவார் கூறியதாவது:-
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் திட்டச்செலவு மாற்றி அமைக்கப்பட்டது. கட்டுமானத்துக்கான மாஸ்டர் பிளான் இறுதி செய்யப்பட்டு விட்டது. டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மதுரையில் எய்ம்ஸ் நிச்சயம் வரும் என்று உறுப்பினருக்கு உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்' இவ்வாறு அவர் கூறினார்.