50-வது சுதந்திர தினத்தை காங்கிரஸ் கொண்டாடாதது ஏன்?; மந்திரி ஹாலப்பா ஆச்சார் கேள்வி

50-வது சுதந்திர தினத்தை காங்கிரஸ் ஏன் கொண்டாடவில்லை என்று மந்திரி ஹாலப்பா ஆச்சார் கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update: 2022-08-11 14:59 GMT

உப்பள்ளி;

மந்திரி ஹாலப்பா ஆச்சார் பேட்டி

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியும், தார்வார் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ஹாலப்பா ஆச்சார், உப்பள்ளியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியகொடி ஏற்ற மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படும். இதனால் காங்கிரஸ் பொறாமையில் சுதந்திர தினம் கொண்டாட்டம் குறித்து பா.ஜனதாவை அவதூறாக பேசி வருகிறது.

முதல்-மந்திரி மாற்றமில்லை

50-வது சுதந்திர தினத்தை, காங்கிரஸ் கோலாகலமாக கொண்டாடாதது ஏன். பணம் கொடுத்து சித்தராமோற்சவா விழாவில் மக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளனர்.

மாநிலத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றமில்லை. ஆட்சியை முழுமை செய்து அவரது தலைமையிலேயே வரும் சட்டசபை தேர்தல் சந்திக்கப்படும். எனவே, முதல்-மந்திரி மாற்றம் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்