பள்ளியில் சமைத்தபோது குக்கர் வெடித்து மாணவி படுகாயம்

மல்லந்தூர் அருகே பள்ளியில் சமைத்தபோது குக்கர் வெடித்து மாணவி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2022-10-20 19:00 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் மல்லந்தூர் அருகே உள்ள மாக்கோடு என்னும் கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது.

இந்த பள்ளியில் பெண் ஒருவர் சமையல் செய்து வருகிறார். அவருக்கு சரிவர சம்பளம் கொடுக்கவில்ைல என தெரிகிறது. இதனால் அவரும் சரியாக பள்ளிக்கு வந்து சமைப்பதில்லை. அதேபோல் நேற்றுமுன்தினமும் அவர் வேலைக்கு வரவில்லை என தெரிகிறது.

இதனால் சத்துணவு சாப்பாட்டை அந்த பள்ளியில் படிக்கும் 7-ம் வகுப்பு மாணவியான நிகிதா என்பவர் தயார் செய்ததாக தெரிகிறது. அப்போது நிகிதா குக்கரில் சம்பார் வைத்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சம்பார் குக்கரை அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைத்துள்ளார்.

அப்போது குக்கர் திடீரென வெடித்துள்ளது. இதில் குக்கரில் மூடி நிகிதாவின் தலையில் பட்டுள்ளது. மேலும் குக்கரில் இருந்த சுட, சுட இருந்த சாம்பார் நிதிதா மீது பட்டுள்ளது. இதில் அவா் பலத்த காயம் அடைந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனே அவரை மீட்டு மல்லந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அவர் ேமல் சிகிச்சைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்