நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எப்போது?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 3-வது வாரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.

Update: 2022-06-15 03:05 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 3-வது வாரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது. ஆகஸ்டு மாதம் 2-வது வாரம்வரை இத்தொடர் நடக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஜூலை 18-ந் தேதி கூட்டத்தொடர் தொடங்கி, ஆகஸ்டு 12-ந் தேதி முடிவடையும் என்று தெரிகிறது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி இந்த தேதிகளை சிபாரிசு செய்துள்ளது.

இருப்பினும், இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

மேலும் செய்திகள்