எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்தால் பா.ஜனதாவுக்கு என்ன பிரச்சினை?- மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கேள்வி

எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்தால் பா.ஜனதாவுக்கு என்ன பிரச்சினை? என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

Update: 2022-11-04 18:45 GMT

பெங்களூரு: எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்தால் பா.ஜனதாவுக்கு என்ன பிரச்சினை? என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இருக்க கூடாது

காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் ரூ.2 லட்சம் நன்கொடை பெறுகிறோம். கட்சி செலவுகள் மற்றும் அலுவலக கட்டிட பணிகளுக்கு பணம் தேவைப்படுகிறது. இதை பா.ஜனதா விமர்சிக்கிறது. எங்கள் கட்சி நிர்வாகிகளிடம் பணம் வசூலித்தால் பா.ஜனதாவினருக்கு என்ன பிரச்சினை?. அவர்களின் விமர்சனம் பற்றி நாங்கள் கவலைப்படுவது இல்லை.

எங்கள் கட்சியில் யாரும் இதற்கு அதிருப்தி தெரிவிக்கவில்லை. அவ்வாறு அதிருப்தி இருந்தால் அவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம். அனைவரையும் கவனத்தில் வைத்தே நாங்கள் பணத்தை பெறும் முடிவை எடுத்துள்ளோம். இது கட்சி விவகாரம். கட்சியை காப்பாற்ற வேண்டும். ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வின் சகோதரர் மகன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நடைபெற்று இருக்க கூடாது. நடந்துவிட்டது.

ஊழலில் முத்திரை

இதில் போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியை பெற்று தர வேண்டும். காங்கிரசின் வாசல் மூடிவிட்டதாக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார். எங்கள் கட்சியை சேர்ந்த 13 எம்.எல்.ஏ.க்களை அவர்கள் பணம் கொடுத்து இழுத்து கொண்டனர். நான் ஊழலின் முத்திரை என்று மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார். எனது பெயரை பயன்படுத்தினால் அவருக்கு மார்க்கெட் கிடைக்கும். அதனால் அவர் என்னை விமர்சிக்கிறார்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்