என்ன நடக்குது...? கொல்கத்தா ஐ.ஐ.எம்.மில் மோதி கொண்ட பெரிய பல்லிகள்; வைரலான வீடியோ

கொல்கத்தா ஐ.ஐ.எம். மையத்தின் வளாகத்தில் 8 அடி உயரத்திற்கும் கூடுதலான இரண்டு பெரிய பல்லிகள் மோதிய வீடியோ வைரலாகி உள்ளது.

Update: 2023-03-02 13:09 GMT


கொல்கத்தா,


மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் இந்திய மேலாண் மையம் எனப்படும் கொல்கத்தா ஐ.ஐ.எம். கல்வி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் நீர் நிலைகள் அமைந்து உள்ளன. இந்த பகுதியில் பெரிய உருவம் கொண்ட உடும்பு வகையை சேர்ந்த பெரிய பல்லிகள் காணப்படுகின்றன.

இவை பெரிய வகை பாம்புகள், சிறிய முதலைகள் உள்ளிட்டவற்றை கூட உணவாக உண்ண கூடியவை. நிலத்தில் வாழ கூடிய இந்த வகை பல்லிகளில் ஆண் பல்லிகள், பெண் பல்லிகளை கவர, தங்களுக்கு உட்பட்ட நில எல்லைகள் என தெரிவிக்க மற்றொரு ஆண் பல்லியுடன் மோதி கொள்ளும்.

இதுபோன்ற ஒரு காட்சி கொல்கத்தா ஐ.ஐ.எம். மையத்தின் வளாகத்தில் காணப்பட்டு உள்ளது. உருவில் பெரிய இரு பல்லிகள், எழுந்து நின்றபடி மோதிய வீடியோவை இந்திய வன துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.

அதில், காலையிலேயே கொல்கத்தா ஐ.ஐ.எம். மையத்தின் வளாகத்தில் காணப்பட்ட காட்சியிது. மோதல்களை எதிர்கொள்வது பற்றி கற்று கொள்கின்றன என தெரிவித்து உள்ளார்.

இந்த வீடியோவை 1 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். அதில் பெண் பயனாளர் ஒருவர், இது இனப்பெருக்கத்திற்கான மோதல் அல்ல. ஏனெனில் அது தரையில் நடக்கும் என தெரிவித்து உள்ளார்.

இது முதலைகள் அல்ல. பெரிய பல்லிகள். முற்றிலும் தீங்கற்றவை. பல தசாப்தங்களாக இந்த கல்வி வளாகத்திலேயே அவை சுற்றி திரிகின்றன என தெரிவித்து உள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்