நிலுவையில் உள்ள நிதியை மத்திய அரசு விடுவிக்கக்கோரி 1.5 கி.மீ. நடைபயணம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்துக்கு இதுவரை நிலுவையில் உள்ள நிதியை வழங்காவிட்டால் தர்ணாவில் ஈடுபட உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-30 12:34 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு அளிக்கும் பல்வேறு நலத் திட்டங்களுக்கான நிதிகள் விடுவிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாநிலத்துக்கு அளிக்க வேண்டிய நிதியை இதுவரை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதற்கான நிதிகளை நாளை மறுநாளுக்குள் வழங்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் பிப்ரவரி 2-ம் தேதி தர்ணாவில் ஈடுபட உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் இன்று காலை திடீரென கட்சித் தொண்டர்களுடன் 1.5 கிலோ மீட்டர் சாலையில் நடந்து சென்று மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் இந்த போராட்ட அறிவிப்பை பாஜகவின் தலைவர் சுவேந்து விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, 'மேற்கு வங்காளத்திற்கு அளிக்கப்பட்ட மத்திய நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதால் தற்போது நிதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது வெறும் தேர்தல் நாடகம் ' இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்