காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்குமாறு ராகுல் காந்தியை நிர்பந்திப்போம்: மல்லிகார்ஜூன் கார்கே

காங்கிரஸ் கட்சியில் ஒருவர் தலைவராக இருக்க வேண்டுமென்றால் அவர் குமரி முதல் காஷ்மீர் வரை அறிந்தவராக இருக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-27 09:29 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகிய குலாம் நபி ஆசத், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தும் இருந்தார். இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் தலைவராக

பொறுப்பேற்குமாறு ராகுல் காந்தியை நிர்பந்திப்போம் என்று மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மல்லிகார்ஜூன் கார்கே கூறியதாவது;

காங்கிரஸ் கட்சியில் ஒருவர் தலைவராக இருக்க வேண்டுமென்றால் அவர் குமரி முதல் காஷ்மீர் வரை அறிந்தவராக இருக்க வேண்டும். நாடு முழுவதும் ஆதரவை பெறும் தகுதி இருக்க வேண்டும் . அவ்வாறு உள்ள ஒருவர் ராகுல் காந்தி. அவருக்கு மாற்றாக யார் இருக்க முடியும், வேறு யாரும் இல்லை, எனவே ராகுலை மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என வற்புறுத்தி சொல்வோம்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்