சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் நலன் பாஜகவுக்கு தேவையில்லை - ராகுல் காந்தி விமர்சனம்

பாஜகவுக்கு பெருமுதலாளிகளின் நலன் மட்டுமே தேவைப்படுகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Update: 2022-08-04 00:17 GMT

சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் நலன் பாஜகவுக்கு தேவையில்லை, பாஜகவுக்கு பெருமுதலாளிகளின் நலன் மட்டுமே தேவைப்படுகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கர்நாடகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது:-

இந்தியாவில் சிறு, நடுத்தர தொழில்கள் மூலம் கிடைக்கும் எதுவும் இந்தியாவுக்கு வேண்டாம் என்று பாஜக விரும்புகிறது. தங்களுக்குப்பிடித்த 2-3 பெருமுதலாளிகளிடமிருந்து மட்டுமே அனைத்தும் வர வேண்டும் என பாஜக நினைக்கிறது.

மக்களின் பைகளில் இருந்து பணத்தை எடுத்து பெரு முதலாளிகளிடம் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் முழு எண்ணம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்