அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் போது திடீரென விழுந்த ராட்டினம்... கதிகலங்க வைக்கும் வீடியோ...

ராஜஸ்தானில் ராட்சத ராட்டினம் ஒன்று சுழன்று கொண்டிருக்கும்போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

Update: 2023-03-22 10:07 GMT

அஜ்மீர்,

ராஜஸ்தானில் ராட்சத ராட்டினம் ஒன்று சுழன்று கொண்டிருக்கும்போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போர் நெஞ்சை கதிகலங்க வைத்து வருகிறது.

முன்னதாக நேற்று அஜ்மீரில் உள்ள கண்காட்சி ஒன்றில் செங்குத்தான அச்சில் சுழன்று கொண்டே மேலெழும்பும் ராட்டினம் ஒன்று உயரத்திற்குச் சென்றது. பின்னர் கீழே வரும்போது அதன் கேபிள் திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து ராட்டினத்தில் சவாரி செய்தவர்கள் அலறினர். சுற்றியிருந்தவர்கள் வேகமாக சென்று அவர்களுக்கு உதவினர்.

பின்னர் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக, கடந்த ஆண்டு இதேபோன்று, பஞ்சாபின் மொஹாலியில் தசரா கண்காட்சியில் ராட்டினம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் குழந்தைகள் உட்பட 16-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்