திடீர் தொழில்நுட்ப கோளாறு: அவசர அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம்

சிறிய ரக விமானத்தில் 2 விமானிகள் பயணித்த நிலையில் அவர்கள் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Update: 2023-07-12 06:21 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் நேற்று இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு விமான நிலையம் நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் 2 விமானிகள் மட்டுமே பயணித்தனர்.

புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் முன்பக்க சக்கரத்தின் இயக்கம் தடைபட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விமானம் உடனடியாக புறப்பட்ட விமான நிலையத்திற்கே திரும்பி வந்தது. விமானத்தின் முன்பக்க சக்கரம் செயல்படாததால் விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஆனால் விமானியின் சாதுரியத்தால் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. தரையிறக்கத்தின் மோது ஓடுதளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் வழுக்கி சென்ற விமானம் சற்று தடுமாறியது. ஆனாலும், இந்த தரையிறக்கத்தின் போது விமானத்தில் இருந்த 2 விமானிகளுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. 



Tags:    

மேலும் செய்திகள்