சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில்: பிரதமர் மோடிக்கு கவர்னர் தமிழிசை நன்றி
சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதற்காக பிரதமர் மோடிக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதற்காக பிரதமர் மோடிக்கு புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;
"தென்தமிழக மக்களுக்காக மத்திய இரயில்வே துறை அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் நேரடியாக நான் வைத்த கோரிக்கையை ஏற்று
சென்னை - திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் விரைவு இரயில் சேவையை விரைந்து நடவடிக்கை எடுத்து செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி தென் தமிழக மக்களின் பயணங்களை எளிதாக்கிய மாண்புமிகு பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.