மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசி; 3-ம் கட்ட பரிசோதனை நிறைவு

பாரத் பயோடெக் நிறுவனம் மூக்குவழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது

Update: 2022-06-19 02:31 GMT

கோப்புப்படம் AFP 

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுகாதாரப்பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் மூக்குவழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது .இந்த நிலையில் தற்போது அந்த தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா எல்லா கூறியுள்ளார் .

இது குறித்து அவர் கூறுகையில் ;

மூக்குவழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியின் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனைகள்   நிறைவடைந்துள்ளன, தரவு பகுப்பாய்வு நடந்து வருகிறது. அடுத்த மாதம், தரவை ஒழுங்குமுறை நிறுவனத்திடம் சமர்ப்பிப்போம். எல்லாம் சரியாக இருந்தால் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்