உத்தரபிரதேசம்: சட்டப்பேரவையை நோக்கி அகிலேஷ் யாதவ் தலைமையில் பேரணி

உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக சட்டப்பேரவையை நோக்கி சமாஜ்வாதி கட்சியினர் பேரணி செல்கின்றனர்.

Update: 2022-09-19 05:37 GMT

லக்னோ,

உத்தரபிரதேச சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.

இந்த நிலையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறி சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில் சட்டப்பேரவையை நோக்கி அக்கட்சியினர் பேரணி செல்கின்றனர்.

இது குறித்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறுகையில், எந்தவொரு கட்சியும் ஜனநாயக வழியில் தங்கள் கேள்விகளைக் கேட்டால் பாதிப்பு இல்லை. சமாஜ்வாடி கட்சி யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பேரணி நடத்த அனுமதி பெற வேண்டும்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர்களிடம் சட்டம்- ஒழுங்கைப் பின்பற்றுவதை எதிர்பார்ப்பது மிகவும் கடினமாகும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேசத்தின் சட்டம்-ஒழுங்கு இந்தியா மட்டுமின்றி உலகத்திற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறது என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்