உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சந்தித்துப் பேசினார்.

Update: 2022-08-07 13:36 GMT

புதுடெல்லி,

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி வந்த உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது வளர்ச்சி திட்டங்கள் உத்தர பிரதேச மாநில அரசியல் சூழல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்து இருக்கலாம் என்று தெரிகிறது.

முன்னதாக, நிதி ஆயோக்கின் 7-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் ராஷ்டிரபதி பவனில் உள்ள கலாசார மைய கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர வளர்ச்சி, தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்துதல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்