உ.பி. சட்டம் ஒழுங்கு நிலவரம் நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே உதாரணம் - யோகி ஆதித்யநாத்
உ.பி.சட்டம் ஒழுங்கு நிலவரம் நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே உதாரணம் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநில போலீஸ் துறையை சீரமைக்கும் திட்டத்தின் 56 மாவட்டங்களுக்கு நவீன சிறை வாகனங்களை அறிமுகப்படுத்தும் விழாவை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேச சட்டம் ஒழுங்கு நிலவரம் நாட்டிற்கு மட்டுமின்றி உலகத்திற்கே உதாரணமாக திகழ்கிறது.
2017-ம் ஆண்டுக்கு முன்னர் வன்முறை, அராஜகம் மற்றும் போக்கிரித்தனம் குறித்து விவாதிக்க மக்கள் உத்தரபிரதேசத்தை உதாரணமாக பார்த்தனர். ஆனால், தற்போது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது' என்றார்.