பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின் சகோதரன் மர்ம மரணம் - அதிர்ச்சி சம்பவம்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின் சகோதரன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-08-21 09:32 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டம் அஹ்ரா பகுதியை சேர்ந்த இளம்பெண் கடந்த 13- ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் சிலர் தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின் சகோதரன் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அஹ்ரா பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பெண்ணின் சகோதரன் தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் பிணமாக கிடந்த அந்த நபரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள கும்பலே பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனை அடித்துக்கொன்று தூக்கில் தொங்கவிட்டுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.    

Tags:    

மேலும் செய்திகள்