இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி படம் வெளியிட்ட மனைவி-மகளை கொலை செய்த ரிக்‌ஷா தொழிலாளி

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட மனைவி மற்றும் மகளை ரிக்‌ஷா தொழிலாளி ஒருவர் கொலை செய்து உள்ளார்.

Update: 2022-10-05 12:40 GMT

லக்னோ

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ரிக்‌ஷா தொழிலாளி ஒருவர் தனது மனைவியையும் 15 வயது மகளையும் கொலை செய்து உள்ளார். அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படம் வெளியிட்டு உள்ளனர். மேலும் நொய்டாவில் உள்ள ஒருவருடன் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக ரிக்‌ஷா தொழிலாளி சந்தேகப்பட்டார்.

காசியாபாத்தில் ரிக்‌ஷா ஓட்டி வந்தவர் சஞ்சய் பால். இவரது மனைவி ரேகா பால் ( 35) மகள் தாஷு இருவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தனர். இன்ஸ்டாகிராமில் தங்கள் கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சஞ்சயிடம் அக்கம் பக்கத்தினர் மனைவி -கள் சமூகவலைதளத்தில் கவர்ச்சிப்படம் போடுவது குறித்து கேலி செய்து உள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து மனைவி மற்றும் மகளை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்து உள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் பாலை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்