உ.பி. ரசாயன ஆலை வெடிவிபத்தில் 9 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்

உத்தர பிரதேசத்தில் ரசாயன ஆலையில் 9 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-06-04 13:34 GMT



புதுடெல்லி,



உத்தர பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள ரசாயன ஆலையில் பாய்லர் ஒன்று இன்று திடீரென வெடித்துள்ளது. இதனை தொடர்ந்து எழுந்த தீயானது அந்த பகுதி முழுவதும் பரவி கரும்புகையாக காணப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். இதுதவிர 19 பேர் காயமடைந்து உள்ளனர்.

அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் மற்றும் சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளையும் வழங்குவதில் மாநில அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்