பல ஆண்டுகளாக சத்தீஷ்கார் மாநில மகளிரை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி வருகிறது - ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

சத்தீஷ்கார் மாநிலத்தில் மதுபானத்தை தடை செய்வதாக காங்கிரஸ் கட்சி உறுதியளித்திருந்தது.

Update: 2023-11-05 12:14 GMT

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டத் தேர்தல் வருகிற 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் இம்மாநிலத்தை மீண்டும் பாஜக வசம் கொண்டு வர அக்கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி கொண்டகவான் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது,

பல ஆண்டுகளாக சத்தீஷ்கார் மாநில மகளிரை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி வருகிறது. குடிப்பழக்கத்தில் இருந்து உங்கள் குடும்பத்தை விடுவிப்பதாக காங்கிரஸ் கட்சி வீடு வீடாக சென்று பெண்களை நம்ப வைத்தது.

மாநிலத்தில் மதுபானத்தை தடை செய்வதாக காங்கிரஸ் கட்சி உறுதியளித்திருந்தது. மாநிலத்தில் முழுவதுமாக மதுபானக் கடைகள் ஒழிக்கப்படும் என பெண்களை நம்பவைத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. ஆனால், தற்போதுவரை மதுபானங்களுக்குத் தடை விதிக்கவில்லை. ஆனால், அவர்கள் ரூ.2,000 கோடி வரை ஊழல் செய்தார்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்