மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகாரிப்பால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுமாறு மத்திய அரசு மக்களை அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று இந்தியாவில் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வது மக்களுக்கு சற்று பயத்தை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று நடைபெறுவதாக இருந்த இந்திய விமானப்படை தளபதிகளின் மாநாட்டில் கலந்து கொள்ள ராஜ்நாத்சிங் திட்டமிட்டு இருந்தார். ஆனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளர். லேசான அறிகுறியுடன் வீட்டில் தனிப்படுத்தப்பட்டுள்ள ராஜ்நாத் சிங் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.