பெங்களூரு விமான நிலையத்தில் நடக்க முடியாத பயணிக்கு சக்கர நாற்காலி மறுப்பு-விமானத்தை தவறவிட்டதால் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை

பெங்களூரு விமான நிலையத்தில் நடக்க முடியாத பயணிக்கு சக்கர நாற்காலி மறுக்கப்பட்டதால் அவர் விமானத்தை தவறவிட்டார். அத்துடன் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் போன சோக சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-10-14 18:45 GMT

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் நடக்க முடியாத பயணிக்கு சக்கர நாற்காலி மறுக்கப்பட்டதால் அவர் விமானத்தை தவறவிட்டார். அத்துடன் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் போன சோக சம்பவம் நடந்துள்ளது.

கெம்பேகவுடா விமான நிலையம்

பெங்களூரு சககாராநகர் பகுதியை சோந்தவர் ராஜீவ் (வயது 31). இவரது பெற்றோர் கோபால் (57) மற்றும் பாரதி. இதில் கோபால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி கால் முறிந்து, சக்கர நாற்காலி உதவியுடன் நடமாடி வருகிறார்.

இந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள கோபாலின் தந்தை இறந்துவிட்டார். இதனால் அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக கோபால், அவரது மனைவி பாரதி, மகன் ராஜீவ் ஆகியோர் ஏர்லைன் நிறுவனத்தின் விமானத்தில் 3 டிக்கெட்டுகளை பதிவு செய்து இருந்தனர். ெகால்கத்தா செல்வதற்காக அவர், குடும்பத்துடன் கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு வந்தார்.

சக்கர நாற்காலி மறுப்பு

அப்போது கோபாலுக்கு சக்கர நாற்காலி தேவைப்பட்டதால், அவரது மகன் ராஜீவ் இன்டிகோ விமான நிறுவனத்தின் சக்கர நாற்காலியைஎடுத்து, அதில் தனது தந்தையை அமரவைத்து அழைத்து கொண்டு விமானம் இருக்கும் இடத்தை நோக்கி சென்றார்.

அப்போது அவரை மறித்த அதிகாரிகள், சக்கர நாற்காலி தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும், இதை தங்கள் நிறுவன விமானங்களில் செல்பவர்கள் முன்பதிவு செய்து மட்டுமே பயன்படுத்த முடியும் என கூறியுள்ளனர்.

இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை

இதனால் அவர்களுக்கும், ராஜீவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. விமானம் புறப்பட தயாராக இருப்பதாகவும் உடனடியாக தங்களை அனுப்புமாறும் ராஜீவ் கூறினார். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். மேலும், சக்கர நாற்காலியையும் அவரிடம் இருந்து பறித்துவிட்டனர்.

இதையடுத்து ராஜீவ் தனது தந்தையை கைப்பிடித்து அழைத்துச் சென்றார். மேலும், அவரை ஒரு இடத்தில் அமரவைத்துவிட்டு, சக்கர நாற்காலிக்காக சென்றார். ஆனால் அதற்குள் அவர்கள் பயணிக்க இருந்த விமானம் புறப்பட்டது. இதனால் கோபால் உள்ளிட்ட 3 பேரும் விமானத்தை தவறவிட்டனர். மேலும் கோபால் தனது தந்தை இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் போன சோக சம்பவம் நடந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்