உக்ரைன் பிரகடனம் பிரதமர் மோடியின் 'மேஜிக்' - மத்திய அரசு கருத்து
உக்ரைன் பிரகடனம் பிரதமர் மோடியின் உத்தரவாதம் மற்றும் மேஜிக்கை காட்டுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லி ஜி-20 மாநாட்டில், உக்ரைன் போர் தொடர்பாக ஒரு பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக நேற்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-
உக்ரைன் போர் தொடர்பான ஜி-20 பிரகடனத்தை, பிளவுபட்ட கருத்தொற்றுமைக்கு பதிலாக ஒருங்கிணைக்கப்பட்ட கருத்தொற்றுமை எனலாம். இது, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பாதையை காட்டும்.
பிரேசில், தென்ஆப்பிரிக்கா, இந்ேதானேசியா என வளரும் நாடுகளுடன் இடைவிடாமல் பேசி, இந்தியா கருத்தொற்றுமை ஏற்படுத்தி உள்ளது. இது, பிரதமர் மோடியின் உத்தரவாதம் மற்றும் மேஜிக்கை காட்டுகிறது.
கடந்த ஆண்டு, பாலி தீவில் நிறைவேற்றப்பட்ட ஜி-20 பிரகடனத்தில் இருந்து இது மாறுபட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.