மண்ணின் மைந்தர்களுக்கு அவமானம் - மராட்டிய கவர்னருக்கு உத்தவ் தாக்கரே கண்டனம்

மராட்டிய ஆளுநர் பகத் சிங் கோஷியாரி மராட்டிய மண்ணின் மைந்தர்களுக்கு அவமானம் ஏற்படுத்திவிட்டார் என்று உத்த்வ் தாக்கரே சாடியுள்ளார்.

Update: 2022-07-30 12:02 GMT

மும்பை,

மராட்டிய மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கவர்னர்பேசுகையில், குஜராத்தில் மற்றும் ராஜஸ்தானி மக்களை வெளியேற்றினால் இந்த மாநிலத்தில் பணமே இருக்காது. குறிப்பாக மும்பை மற்றும் தானே முடங்கிவிடும். மேலும் இந்தியாவின் நிதிநிலைமைக்கான தலைநகராக மும்பை இருக்க முடியாது" என்றார்.கவர்னரின் பேச்சுக்கு பரவலாகக் கண்டனம் எழுந்துள்ளது.

மராட்டிய முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே கூறுகையில் "ஆளுநர் பகத் சிங் கோஷியாரியின் பேச்சு இந்துக்களை பிளவு படுத்த முயல்கிறார். அவரது பேச்சு மராட்டிய மண்ணின் மைந்தர்களுக்கும், மண்ணின் மாண்பிற்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி அரசாங்கம் தான் அவரை வீட்டுக்கு அனுப்புவதா இல்லை சிறைக்கு அனுப்பவதா என்று முடிவு செய்ய வேண்டும்" என்று சாடியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்