மராட்டிய முதல் மந்திரி பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா
நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்க மறுத்த நிலையில், மராட்டிய முதல் மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட்டார். கவர்னர் உத்தரவுக்கு எதிராக முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு வெளியான சில நிமிடங்களிலேயே பேஸ்புக் வாயிலாக உரையாற்றிய மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். முன்னதாக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் தனது உரையின் போது குறிப்பிட்டார்.