பெங்களூரு வாசிகளுக்கு இன்ப அதிர்ச்சி: கட்டிப்புடி வைத்தியம் நடத்திய 2 இளம்பெண்கள்

பெங்களூரு சர்ச் சாலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இளம்பெண்கள் 2 பேர் அனைவருக்கும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் கமல்ஹாசன் கூறுவது போல இலவசமாக கட்டிப்புடி வைத்தியம் செய்து வருகின்றனர்.

Update: 2022-12-24 17:40 GMT

அதாவது பெங்களூருவை சேர்ந்தவர்கள் அபூர்வ அகர்வால் (வயது 19) மற்றும் தனிஷா பரஸ்ராம்கா (22).இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றனர். அவர்கள் 2 பேரும் சர்ச் தெருவில், கைகளில் 'ப்ரீ ஹக்ஸ்' என்ற ஒரு பதாகை ஏந்தியபடி நின்று அவர்களை கடந்து செல்பவர்கள் பலரையும் கட்டிப்பிடித்து வருகின்றனர்.

ஆண், பெண் என பிரிவினை பாராது அனைவரையும் கட்டிப்பிடித்தனர். அவர்கள் இதைதொடங்கிய ஒரு மணி நேரத்தில் மட்டும் சுமார் 100 பேரை கட்டிப்பிடித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற நிகழ்வு ஒன்றை கண்டதாகவும், அதில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டால், அறிவியல் ரீதியாக, மன அழுத்தம் குறையும் என சொல்லப்படுகிறது.

இன்றைய நகர நாகரீக வளர்ச்சியில் ஒருவரை ஒருவர் நின்று கட்டி ஆரத்தழுவ நேரமின்றி வேலை, படிப்பு என பல்வேறு எண்ணங்களை குறிக்கோளாக கொண்டு மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு நூதன முயற்சியாக இதை மேற்கொண்டோம்' என்றனர். இளம்பெண்களின் கட்டிப்புடி வைத்தியத்தால் பெங்களூருவாசிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்