காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் கைது செய்தனர்.

Update: 2023-08-02 22:11 GMT

கோப்புப்படம்

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஆசாத்கஞ்ச் நகரில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவ வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீவிரதேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை கண்டதும் தப்பியோட முயன்றனர். ஆனால் ராணுவ வீரர்கள் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை ராணுவ வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட 2 பயங்கரவாதிகளும் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், சுதந்திர தினத்தையொட்டி பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் நோக்கில் அவர்கள் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்