ஜம்மு காஷ்மீரில் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு,
ஜம்மு காஷ்மீர் கத்ராவில் இருந்து கிழக்கே 62 கிமீ தொலைவில் இரவு 11:04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது புவி மட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான விவரங்கள் வெளியாகவில்லை.
தொடர்ந்து இரவு 11:52 மணியளவில் கத்ராவில் இருந்து கிழக்கே 60 கிமீ தொலைவில் 3.2 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது புவி மட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.