மோசடியில் ஈடுபட்ட ஆப்பிரிக்காவை சேர்ந்த 2 பேர் கைது

மோசடியில் ஈடுபட்ட ஆப்பிரிக்காவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-21 16:00 GMT

பெங்களூரு: பெங்களூரு வடகிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் பண மோசடி செய்ததாக ஆப்பிரிக்காவை சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்களது பெயர்கள் அட்ஜிஅங்கே அல்பிரேட் அதோனி, பசோயின் அவலோகா என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் வங்கி ஒன்றின் இணையதளத்தை முடக்கி, அதில் திரிபுரா மாநில மக்கள் வங்கியில் செலுத்தும் பணத்தை தங்களது வங்கிக்கணக்கிற்கு வரும்படி மாற்றம் செய்து இருந்தது தெரியவந்தது.

மேலும் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி பொதுமக்களிடம் 2 பேரும் பணம் வசூலித்து மோசடி செய்ததும் தெரியவந்து உள்ளது. கைதான 2 பேர் மீதும் வெளிநாட்டினர் தடுப்பு காவல் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்