கனடாவை சேர்ந்த பயங்கரவாதியின் கூட்டாளிகள் இருவர் கைது பஞ்சாப்பில், டெல்லி போலீசார் அதிரடி

குடியரசு தின விழாவை முன்னிட்டு காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக டெல்லி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-20 21:38 GMT

புதுடெல்லி, 

குடியரசு தின விழாவை முன்னிட்டு காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக டெல்லி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகளில் இந்த அதிரடி தொடர்ந்து வருகிறது.

இதன் பயனாக பஞ்சாப்பின் குர்தாபூரை சேர்ந்த ராஜன் பட்டி மற்றும் பிரோஸ்பூரை சேர்ந்த கன்வல்ஜீத் சிங் என்ற சின்னா ஆகிய இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் கனடாவை சேர்ந்த ரவுடியும், பயங்கரவாதியுமான லக்பிர் சிங் லந்தாவின் கூட்டாளிகள் ஆவர். இவர்கள் பஞ்சாப்பில் பல்வேறு கொலைகள் மற்றும் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் சதிச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள். இவர்கள் இருவரும் பஞ்சாப் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளும் ஆவர்.

முதலில் ராஜன் பட்டியை கைது செய்த போலீசார், பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் கன்வல்ஜீத் சிங்கை கைது செய்தனர்.

இந்த இருவரும் கைது செய்யப்பட்டிருப்பது பஞ்சாப் மற்றும் டெல்லி போலீசாருக்கு நிம்மதியை கொடுத்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

மேலும் செய்திகள்