பதற்றமான வாக்குச்சாவடிகளை அடையாளம் காணவேண்டும்

சட்டசபை தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளை அடையாளம் காண வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-01-08 18:45 GMT

குடகு:-

தேர்தல் ஆலோசனை

குடகு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டசபை தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சதீஸ் தலைமையில் நடந்தது. இதில் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் பேசியதாவது:- விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் கவனமாக செய்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளை அடையாளம் காணவேண்டும். அதுகுறித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும். அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அடிப்படை வசதிகள் ஆய்வு

மேலும் வாக்குச்சாவடிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து, குடிநீர், மின்சாரம், கழிவறை, நாற்காலிகள் ஆகிய அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை தயார் செய்ய வேண்டும். அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குச்சாவடிகளில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

தேர்தல் கமிஷனரின் உத்தரவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஏதேனும் வழக்குகள் பதிவாகியிருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவேண்டும். தகராறில் ஈடுபடுபவர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்கவேண்டும். இதற்கான பொறுப்பு அனைத்து அதிகாரிகளுக்கும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். ேமலும், தேர்தல் குறித்த நோட்டீசை அவர்

கூட்டத்தில் வெளியிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்