சமூக வலைத்தள நட்பு.. 16 வயது சிறுமியை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம்

போலீசார் வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Update: 2024-05-02 10:47 GMT

அகர்தலா:

திரிபுரா மாநிலம் செபாஹிஜலா மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, சமூக வலைத்தளங்கள் மூலம் 2 ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் ஒருவரின் வீட்டுக்கு கடந்த மாதம் 27-ம் தேதி சிறுமி சென்றுள்ளார். அப்போது சிறுமியை இரண்டு நபர்களும் சேர்ந்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மறுநாள் காலையில் வீடு திரும்பிய சிறுமி, சோகமாக இருப்பதை பார்த்து பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் இதுபற்றி பிஷால்கர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளியை நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளனர். மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர், கடந்த மார்ச் மாதம் அந்த சிறுமிக்கு அறிமுகம் ஆகி உள்ளார். அடிக்கடி தொடர்பு கொண்டு, ஆசை வார்த்தைகள் கூறி அவரை தனது ஆசைக்கு இணங்கும்படி செய்து, உல்லாசமாக இருந்ததாகவும், இதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர், ஏப்ரல் 27-ம் தேதி வீட்டுக்கு வரவழைத்து, நண்பருடன் சேர்ந்து மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்