டெல்லியில் பழங்குடியினர் கலைக் கண்காட்சி இன்று தொடங்கியது

டெல்லியில் பழங்குடியினர் கலைக் கண்காட்சி இன்று தொடங்கி 5 நாள் நடைபெறுகிறது.

Update: 2022-08-22 18:33 GMT

Image Courtesy: ANI

புதுடெல்லி:

புதுடெல்லியில் ஒடிசா லலித் கலா அகாடமியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் ஐந்து நாள் பழங்குடியினர் கலைக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பழங்குடியினரின் செழுமையான அழகியல் உணர்வை மக்களுக்கு வழங்குகிறது.

ஆகஸ்ட் 26-ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியை ஒடியா மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மதுசூதன் பதி தொடங்கி வைத்தார்.

இந்த வெளியீட்டு விழாவில் ஒடிசா லலித் கலா அகாடமியின் தலைவரான பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் கலந்து கொண்டார். இந்தக் கண்காட்சியில் ஒடிசாவைச் சேர்ந்த 40 பழங்குடியின கலைஞர்களின் ஓவியங்கள் மற்றும் கலைகள் இடம்பெற்றுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்